- WORKING HOURS
1st Year
|
Morning |
08.45 am - 12.40 pm |
Lunch Interval |
12.40 pm - 01.40 pm |
Afternoon |
01.40 pm - 04.35 pm |
2nd,4rd and 4th Year
|
Morning |
09.00 am - 12.55 pm |
Lunch Interval |
12.55 pm - 01.55 pm |
Afternoon |
01.55 pm - 04.50 pm |
office
|
Morning |
9.30 am - 01.30 pm |
Lunch Interval |
01.30 pm - 02.30 pm |
Afternoon |
02.30 pm - 06.30 pm |
- விதிகள் மற்றும் விதிமுறைகள்:
- மாணவர்கள் – கல்லூரி வளாகத்தில் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் மாணவர்கள் தேவையில்லாத செய்கைகளான குழுவாக நிற்றல்,ஒலி எழுப்புதல், போன்ற தகாத செய்கைகளினால் வகுப்பு எடுப்பத்தற்கு தொந்தரவு செய்யக்கூடாது.
- மாணவர்கள் அலைபேசி உபயோகத்தை கல்லூரி வளாகத்தினுள் தவிர்த்தல் வேண்டும்.
- மாணவர்கள், நமது கல்லூரி மற்றும் இதர கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ள அல்லது நடத்த துறைத்தலைவர் அல்லது கல்லூரி முதல்வரிடம் முன் அனுமதி பெற்றிருக்கவேண்டும்.
- மாணவர்கள் 100CC க்கும் குறைவான அளவு உள்ள இருசக்கர வாகன்ங்களையே பயன்படுத்த வேண்டும். அவர்கள் முறையான வாகன ஒட்டுரிமை வைத்திருத்தல் வேண்டும். தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். கல்லூரி வளாகத்தினுள் 10கி.மீ. வேகத்திலேயே வாகனத்தை செலுத்த வேண்டும்.
- மாணவர்கள் கல்லூரி உடைமைகளுக்கு எந்த சேதமும் விளைவிக்காமல் பயன்படுத்தவேண்டும்.
- மாணவர் விடுப்பு:
- மாணவர்கள் தினசரி வகுப்பிற்கு வரவேண்டும்.
- நியாயமான காரணங்களுக்கு விடுமுறை எடுக்க முன்கூட்டியே தனது வகுப்பு ஆலோசகரிடம் அனுமதி பெற வேண்டும். உடல் நிலை முடியாத போது ஒரு மருத்துவச் சான்றிதழ், சமர்ப்பிக்கவேண்டும்
- மாணவர்களிம் வருகை, வகுப்புகளின் கால அடிப்படையில் கணக்கிடப்படும்.
- தேர்வு காலத்தில் வருகை பதிவு கட்டாயம் ஆகிறது. தேர்வுக்கு விடுமுறை எடுத்தல், அது ஆசிரியர்களால் வழங்கப்படும் உள்ளீட்டு மதிப்பெண்னை பாதிக்கும்.
- வருகைப்பதிவு மற்றும் விடுப்பு விதிகள்:
வருகைப்பதிவு:
- ஒவ்வொரு வகுப்புகள் துவக்கத்திலும் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகையை பதிவு செய்வர். ஆசிரியர்கள், மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் நேரத்தில் வகுப்பறையில் இல்லாத மாணவர்களுக்கு வருகைப் பதிவு அளிக்கப்படமாட்டது.
- மாணவர்களின் வருகைப்பதிவு ஒவ்வொரு மாத இறுதியிலும் கணக்கிடப்பட்டு அறிவிப்பு பலகை மற்றும் பெற்றோர்களின் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும்.
- மாணவர்கள் இறுதி தேர்வு எழுத குறைந்தபட்சம் 80% வருகைப்பதிவு இருத்தல் அவசியம். குறைந்தபட்ச வகுகைப்பதிவை பூர்த்தி செய்யாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விடுமுறைகள்:
அனைத்து ஞாயிறு, சனிக்கிழமை (முதல் & மூன்றாம் ) மற்றும் கல்லூரியினால் அறிவிக்கப்படும் விடுமுறைகள்.