அன்பார்ந்த பெற்றோர்களே
உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் ஞானத்தை போதிக்கும் “புண்ணிய பூமிக்கு” உங்களை வரவேற்கிறோம். பெற்றோர்கள் மற்றும் மாணவர்களால் இந்தியாவிலேயே மிக அதிகமாக தேர்ந்தெடுக்கப்படும் தொழில் நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகிறது சோனா தொழில் நுட்பக் கல்லூரி நாட்டிலேயே சிறந்த தொழில் நுட்பக் கல்லூரியாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது சோனா கல்லூரி. சோனா குழுமத்தைச் சார்ந்த மிகச் சிறந்த தொழில்நுட்பக் கல்லூரியான தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரியை போலவே சோனா கல்லூரியும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பையும், தங்களை ஆசிரியத்துறையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அனுபவமிக்க ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. உன்னதமான இந்த சேவையை சமூகத்துக்கு அளித்து வரும் சோனா கல்லூரியிலிருந்து வெளி வரும் மாணவர்கள் தாங்கள் என்றும் நேசிக்கும் தங்கள் கல்லூரியை தங்களின் மற்றொரு வீடாக உணர்கிறார்கள்.
மேலும் இக்கல்லூரி தங்களை சிறந்த பொறியாளர்களாய் உருவாக்குவது மட்டுமின்றி சவால்களை எதிர்கொண்டு தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்த சிறந்த வாழ்வினை மேற்கொள்வதற்கு உரியவர்களாக மாற்றி தருகின்றது என்று பூரிகிறார்கள். இத்தகைய வெளிபாடுகள் சோனாவை மகிழ்விக்கிறது சோனா தன் மாணவர்களுக்கு மிக சிறந்த பண்புகளை வெளிக் கொணர்ந்து வருகிறது.
இதன் வாயிலாக மாணவர்களின் வாரத் தேர்வு மதிப்பெண்கள், வருகைப் பதிவு மற்றும் இதற தேவையான தகவல்களை பெறலாம்.